நூர் ஜஸ்லான்: உள்துறை அமைச்சு காணொளிகளையும் பொய்ச் செய்திகளையும் கண்காணிக்கிறது

உள்துறை      அமைச்சு    காணொளிகளும்   பொய்ச்  செய்திகளும்   2018  பொய்ச்  செய்தித்    தடுப்புச்   சட்டத்தை   மீறாதிருப்பதை   உறுதிப்படுத்த   அவற்றைத்    தொடர்ந்து   கண்காணித்து   வருகிறது.

பொய்ச்   செய்திகள்  மக்கள்  மத்தியில்   செல்வாக்கு  பெற்றுவிடாமல்    தடுப்பதற்காக   அவ்வாறு   செய்யப்படுகிறது    என்று   பரமரிப்பு   உள்துறை  துணை  அமைச்சர்    நூர்   ஜஸ்லான்   முகம்மட்   கூறினார்.

“எடுத்துக்காட்டுக்கு,  அண்மையில்    கோலாலும்பூர்    அனைத்துலக   விமான   நிலையத்தில்  வங்காள    தேசிகள்   நிறைந்திருப்பது  போலவும்    அவர்கள்  பாரிசான்   நேசனல்   தொப்பிகளை   அணிந்திருப்பது  போலவும்   காண்பிக்கும்  படத்தை    வெளியிட்டு    அவர்கள்   14வது   பொதுத்    தேர்தலில்   வாக்களிப்பதற்காக   வந்திருக்கிறார்கள்    என்றும்   கூறினார்கள்”,  என்றவர்      தாம்போயில்    செய்தியாளர்களிடம்   கூறினார்.

நூர்  ஜஸ்லான்  பூலாய்   நாடாளுமன்றத்   தொகுதியில்  மீண்டும்     களமிறங்குகிறார்.

அத்தொகுதி  நாங்கு-முனைப்  போட்டியை    எதிர்நோக்கியுள்ளது.  நூர்  ஜஸ்லானை    எதிர்த்து   முகம்மட்   நஸ்ரி  யாஹ்யா(பாஸ்), சலாஹுடின்    ஆயுப்(பிகேஆர்- அமனா),   யாப்   கெங்  தாக்(சுயேச்சை)   ஆகியோர்   போட்டியிடுகின்றனர்.