மகாதிர்: நஜிப் நாட்டிலிருந்து வெளியேறினால், இன்டர்போல் உதவியுடன் அவரைப் பிடிப்போம்

 

14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன் தோற்கடிக்கப்படும் நிலையில் நஜிப்பும் அவரது குடும்பமும் நாட்டை விட்டு ஓடி விட்டால், அவர்களைக் கண்டுபிடிக்க பதிய அரசாங்கம் இதர நாடுகளின் உதவியை, இன்ட்ர்போல் உட்பட, நாடும் என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறினார்.

“சட்டத்தின் ஆளுமையில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒரு சிலருக்கான தனிச்சலுகையில் எனக்கு நம்பிக்கை கிடயாது. அவர் சட்டத்தை மீறினால், அவரைப் பிடிப்பதற்கான வழியை சட்டம் காணும்”, என்று கடந்த வெள்ளிக்கிழமை புத்ரா ஜெயாவில் அவருடைய அலுவலத்தில் நடந்த ஒரு நேர்காணலில் மகாதிர் கூறினார்.

இப்போது இன்டர்போல் மற்றும் அது போன்ற அமைப்புகள் இருக்கின்றன. சட்டம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், அதற்கு போதுமான சாட்சியங்கள் இருக்கின்றன. மேலும், இன்னும் கூடுதல் சாட்சியங்கள் அளிக்க பலர் இருக்கின்றனர் என்றாரவர்.

1எம்டிபி மீதான மூன்று வெவ்வேறான விசாரணைகளின் முடிவுகளை – நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஎசி), எம்எசிசி மற்றும் பேங் நெகாரா) அவர் குறிப்பிட்டார்.

யாரையும் பழி வாங்கும் நோக்கம் பக்கத்தான் ஹரப்பானுக்கு இல்லை என்பதை வலியுறுத்திய மகாதிர், அனைவரும், முன்னாள் பிரதமர்கள் உட்பட, சட்டத்தின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள் என்றாரவர்.

சட்டத்தை மீறி விட்டோம் என்பதை அவர் உணர்ந்திருந்தால், அவர் அஞ்சுவதற்கு காரணம் உண்டு, ஏனெறால் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் மற்றும் குற்றவாளி என்ற தீர்புக்கும் ஆளாகக்கூடும். அவர் அதை விரும்ப மாட்டார் என்று மகாதிர் மேலும் கூறினார்.