சிகாமாட் பெல்டா மக்களுக்கு ரிம1மில்லியன் மறுநடவு ஊக்குவிப்புத் தொகை: சுப்ரா வழங்கினார்

ஜோகூர்   பெல்டா     பாலோங்   திமோர்  டுவா,   பெல்டா   பாலோங்   திமோர்  தீகாவில்   265  குடியிருப்பாளர்கள்  இன்று   தொடங்கி   மறுநடவு   ஊக்குவிப்பாக    ஆளுக்கு  ரிம4,000     பெறுவார்கள்.

சிகாமாட்   நாடாளுமன்ற   வேட்பாளரும்   பராமரிப்பு   சுகாதார   அமைச்சருமான   டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்   நேற்றிரவு    இதனை    அறிவித்தார்.

பராமரிப்புப்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   ஒப்புதலுடன்   அந்த  ஊக்குவிப்புத்   தொகை    வழங்கப்படுவதாக    டாக்டர்    சுப்ரமணியம்    கூறினார்.

பெல்டா   குடியிருப்பாளர்கள்    நான்காண்டுகளாக    அந்த   ஊக்குவிப்புத்   தொகைக்குக்   காத்திருப்பதாக     அவர்   சொன்னார்.

“பிரதமரின்   ஒப்புதலுடன்   அவ்விவகாரத்துக்குத்   தீர்வுகாணப்பட்டிருக்கிறது. நாளை (திங்கள்கிழமை)  தொடங்கிக்  குடியிருப்பாளர்களுக்குப்  பணம்   வழங்கப்படும்”,  என  குகுசான்  பாலோங்   திமோரில்   பெல்டா   விழாவொன்றில்   அவர்   கூறினார்.

மே 9க்குள்    அவர்கள்    அனைவருக்கும்    ஊக்குவிப்புத்   தொகை   கொடுத்து   முடிக்கப்படும்.

இந்த   ஊக்குவிப்புத்  தொகை   குடியிருப்பாளர்களின்   சுமையைக்  குறைக்க   உதவும்    என்று    டாக்டர்   சுப்ரமணியம்   நம்புகிறார்.

-பெர்னாமா