மே 9 -இல் நடைபெறும் 14வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க 9 நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இன்று தொடங்கி வருகை புரியத் தொடங்குவார்கள்.
முதலாவது கண்காணிப்புக் குழு மாலத் தீவிலிருந்து வந்தது. மாலத் தீவு தேர்தல் ஆணையத் தலைவர் அஹமட் ஷரிப் தலைமையில் இன்று காலை மணி 7.20க்கு கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அவர்களை மலேசிய தேர்தல் ஆணைய உறுப்பினர், கே.பாலசிங்கம் வரவேற்றார்.
இன்று தாய்லாந்து, ஆஸர்பைஜான் ஆகிய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலைக் கண்காணிக்க கண்காணிப்பாளர்களை அனுப்ப ஒன்பது நாடுகளுக்கு – ஆஸர்பைஜான், இந்தியா, கம்போடியா, கிரிகிஸ்தான், மாலத் தீவு, பாகிஸ்தான், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் – அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத் தலைவர் முகம்மட் ஹஷிம் அப்துல்லா ஏற்கனவே கூறியிருந்தார்.
இவர்கள் தவிர்த்து உள்நாட்டளவில் 14 அரசுசாரா அமைப்புகளைச் சேர்ந்த 1236 பார்வையாளர்களையும் இசி தேர்தலைக் கண்காணிக்க நியமித்துள்ளது.