மகாதிருக்கும் பிள்ளைகளுக்கும் 488 நிறுவனங்கள் உள்ளன: முன்னாள் பெர்சத்து உறுப்பினர் கூறுகிறார்

டாக்டர்  மகாதிரும்   அவரின்  பிள்ளைகளான   கொக்சானி,  மரினா,  மிர்சான்,  முக்ரிஸ்  ஆகியோரும்   488  நிறுவனங்களுக்கு   உரிமையாளர்களாம்.
முன்னாள்  பெர்சத்து   உறுப்பினரான   அனினா  சாஆடுடின்   கூறுகிறார்.

அவை  பற்றிய   விவரங்களை   மலேசிய   நிறுவனங்கள்   ஆணைய(சிசிஎம்)த்தில்   பெறலாம்   என்றவர்  ஓர்    அறிக்கையில்    கூறினார்.

“மொக்சானியுடன்   லங்காவி  சிசிஎம்  அலுவலகம்   செல்ல   நான்   தயார்”,  என்றாரவர்.

நாளை  லங்காவியின்     42000  வாக்காளர்கள்    வாக்களிப்பதற்குமுன்   மொக்சானி  இதைச்   செய்ய   வேண்டும்    என்றவர்   கேட்டுக்கொண்டார்.

மகாதிர்  லங்காவி   நாடாளுமன்றத்   தொகுதியில்    போட்டியிடுகிறார்.

இதற்குமுன்  மொக்சானி   தாம்   488  நிறுவனங்களை   வைத்திருப்பதாகவும்  ரிம170பில்லியன்  சொத்துக்கு   அதிபதி    என்றும்  கூறும்   அனினா     அதற்கான   ஆதாரங்களைக்   காண்பிக்க   முடியுமா   என்று  கேட்டிருந்தார்.

மகாதிரைக்  குறை  சொல்வோர்,   பிரதமர்  நஜிப்    அப்துல்  ரசாக்   உள்பட,   முன்னாள்   பிரதமரின்   பிள்ளைகளின்  சொத்து  குறித்து   கேள்வி   எழுப்புவது   வழக்கமான  ஒன்று.

அண்மையில்   நஜிப்,   டிவிட்டரில்,   மொக்சானி   அவரின்   தந்தை   பிரதமராக   இருந்த   காலத்தில்   பெட்ரோனாசிடமிருந்து   பில்லியன்   கணக்கான   ரிங்கிட்   மதிப்புள்ள   குத்தகைகளைப்   பெற்றதாகக்  கூறியிருந்தார்.

ஆனால்,  ஃபோர்பஸ்   பத்திரிகையால்  மலேசியாவின்    பெரும்  பணக்காரர்களில்   ஒருவராகக்  குறிப்பிடப்பட்டிருக்கும்   மொக்சானி,   அதை  மறுத்து   அது  ஒரு  “பொய்ச்  செய்தி”   என்று   சாடினார்.