ஷாபியைப் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சி தோல்வி

பார்டி   வாரிசான்   சாபா    தலைவர்   முகம்மட்  ஷாபி   அப்டாலை  14வது   பொதுத்   தேர்தலில்   போட்டியிட  அனுமதிக்கக்கூடாது     என்று   செய்துகொள்ளப்பட்டிருந்த  மனுவை   கோத்தா   கினாபாலு   உயர்   நீதிமன்றம்   தள்ளுபடி   செய்தது.

செம்போர்னா  அம்னோ   செயல்குழு   உறுப்பினர்   முகம்மட்  அய்னுல்  அப்துல்   ஃபாட்டா   அம்மனுவைக்  கொடுத்திருந்ததாக  பெர்னாமா   கூறியது.

முகம்மட்  அய்னுல்  முதல்    எதிர்வாதியாக    தேர்தல்    ஆணையத்தையும்   இரண்டாவது    எதிர்வாதியாக    முகம்மட்   ஷாபியையும்   குறிப்பிட்டிருந்தார்.

முகம்மட்  ஷாபி,  நாளைய   தேர்தலில்   நாடாளுமன்றதுக்காக     செம்போர்னாவிலும்    சட்டமன்றதுக்காக   செனால்லாங்கிலும்   போட்டியிடுகிறார்.

மனுவைத்   தள்ளுபடி    செய்த    நீதிபதி    அஸாஹாரி   கமால்  ரம்லி,       வழக்குத்   தொடுக்க   உரிமை   முகம்மட்   அய்னுலுக்கு   இல்லை  என்று  தீர்ப்பளித்ததாக   த  ஸ்டார்   ஆன்லைன்   கூறிற்று.

அத்துடன்   எதிர்வாதிகளுக்கு    வழக்குச்  செலவுக்காக     ஆளுக்கு  ரிம10,000   கொடுக்குமாறும்    அவர்    உத்தரவிட்டார்..