சிந்தனைக்குழு: ஜோகூர் விழலாம், பிஎன்னுக்கு ஆதரவு குறைகிறது

பக்கத்தான்  ஹரப்பான்  பினாங்கையும்   சிலாங்கூரையும்   மூன்றில்  இரண்டு  பங்கு   பெரும்பான்மையில்   தக்கவைத்துக்கொள்ளும்    வேளையில்   சாதாரண   பெரும்பான்மையுடன்   ஜோகூரையும்    அது   வெற்றி   கொள்ளக்கூடும்   என்கிறது    இல்ஹாம்   ஆய்வு    மையம்.

பிஎன்  கிளந்தானை   பாஸிடமிருந்து   கைப்பற்றலாம்    என்று  ஓர்    அறிக்கையில்     குறிப்பிட்டிருக்கும்   அம்மையத்தின்     செயல்முறை   இயக்குனர்   ஹிசோமுடின்   பக்கார்,   அக்கூட்டணி  திரெங்கானு,  பகாங்,  பெர்லிஸ்   ஆகியவற்றையும்   தக்க   வைத்துக்கொள்ளும்   என்றார்.

கெடா,  பேராக்கைப்  பொருத்தவரை   ஹரப்பானுக்கு   50-50  வாய்ப்பு   உள்ளது.  நெகிரி   செம்பிலானிலும்    மலாக்காவிலும்   பிஎன்  “சிறிது   பிரச்னையை”  எதிர்நோக்குகிறது.

அம்னோவின்   பிறப்பிடமான    ஜோகூரில்   அடிநிலை  மக்களிடமிருந்து  கிடைக்கும்   பின்னூட்டங்களிலிருந்து   அங்கு   பிஎன்னுக்கு  ஆதரவு  “குறைந்துகொண்டு  வருவதைக்   காண  முடிகிறது.

“மலாய்க்காரர்-  அல்லாதார்   ஆதரவு  மிக  உயர்வாக   உள்ளது  ஆனால்  மலாய்   ஆதரவு   சரிவு  கண்டுள்ளது.

“ஹரப்பான்  பரப்புரையை  முன்னின்று   நடத்தும்  முகைதின்   யாசினும்    அவரின்   குழுவினரும்   மலேசியாவில்   அம்னோவின்   வலிமைவாய்ந்த   கோட்டைக்குள்   ஊடுருவுவதில்   வெற்றி   கண்டுள்ளனர்”,  என்றாரவர்.