வாக்களிக்க தாய்லாந்து மக்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர், தானா மேரா பாஸ் கூறுகிறது

 

நாளை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க 200 லிருந்து 300 தாய் மக்கள் கொண்டுவரப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தானா மேரா பாஸ் கூறுகிறது.

அவர்கள் ஐந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டதாகவும் அவற்றுடன் ஓர் அரசியல் கூட்டணியின் சின்னம் ஒட்டப்பட்ட இரண்டு கார்கள் வந்தன என்றும், அவர்கள் அனைவரும் தேசிய பயிற்சிக் கழக கட்டட வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று அது கூறிற்று.

பாஸின் ஹரக்கா டெய்லி வெளியிட்டுள்ள ஒரு படத்தில் பல ஆண்கள் கூட்டமாக தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆனால் அந்த எந்தத் கட்டடம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாஸ் உறுப்பினர்கள் அங்கு காலை மணி 2.00 வரையில் காத்திருந்தனர் என்றும் அதன் பின்னர் போலீஸைத் தொடர்பு கொண்டதாகவும் பாஸ் தானா மேரா குழு உறுப்பினர் முகமட் ஸாகி மாட் ஸைன் கூறினார்.

ஆனால், அந்த கூட்டணிக்கு வாக்களிக்க அவர்கள் கொண்டுவரப்பட்டனர் மற்றும் அதற்காகப் பணம் கொடுக்கப்பட்டது என்று கூறியதைத் தவிர பாஸ் வேறு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.