பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார் என்று தாம் உணர்வதாக முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் தெரிவித்தார்.
தலைமைத்துவத்தில் அமர்த்தப்பட்டவர்களின் செயல்களும், தவறான நடத்தைகளும் தம்மை துயரத்திற்குள்ளாக்கியிருக்கிறது. நஜிப் எடுத்துக்கொண்ட நம்பிக்கை மற்றும் நேர்மை மீதான சபதத்தை மீறி விட்டதால், அவர் தமக்கு நம்பிகைத் துரோகம் இழைத்து விட்டதாக உணர்வதாக ரபிடா கூறினார்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சில மூத்த அம்னோ தலைவர்கள் கட்சிக்கு துரோகம் இழைக்கும் அளவிற்குச் சென்று விட்டனர் என்று நஜிப் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய ரபிடா இவ்வாறு கூறினார்.
தாம் துரோகம் செய்ததாக கூறப்படுவதை மறுத்த ரபிடா, மலேசியாவில் ஆட்சிமுறை சீரழிக்கப்படுவதை வெறுமனே பார்த்துக் கொண்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தால், நான் நாட்டிற்கும் மக்களுக்கும் துரோகம் இழைத்தவராவேன் என்று மேலும் கூறினார்.
தற்போதைய மலேசியத் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்,
முதலில், நான் ஒரு மலேசியன். நாட்டிற்கும் மக்களுக்குமான ஒரு குறிப்பிட்ட இலக்கை ஆதரிப்பதற்கு நான் எந்த ஒரு கட்சியின் அட்டையக் கொண்டுக்கும் உறுப்பினராக இருக்க வேண்டியதில்லை என்றாரவர்.
ரபிடா மற்றும் இரு மூத்த முன்னாள் அமைச்சர்களான ரயிஸ் யாத்திம் மற்றும் டைம் ஸைனுடின் ஆகியோர் மகாதிருக்கும் பக்கத்தான் ஹரப்பானும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், பக்கத்தான் ஹரப்பான் பேரணிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.