மலாய்க்காரர்கள் நஜிப்பினால் ஏற்பட்ட பேரழிவிற்குப் பின்னர் அவர்களின் பெருமையை மீட்க வேண்டும், மகாதிர் கூறுகிறார்

 

நாளை நடைபெறவிருக்கும் தேர்தல் மலாய்க்காரர்கள் அவர்கள் இழந்து விட்ட பெருமையை மீட்பதற்கான ஒரு சந்தர்ப்பம் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் வாக்களிப்புக்கு முன்னதான அவரது இறுதி உரையில் கூறினார்.

“மலாய்க்காரர்களுக்கு இந்தத் தேர்தல் ஓர் அரசியல் கட்சிக்கு வெறும் வெற்றியைப் பெறுவது மட்டுமல்ல, அது ஓர் இனத்தின் பெருமையை மீட்டு எடுப்பதாகும்.

“நமது பெற்றோர்கள் நம்மை காலனித்துவத்தின் பிடியிலிருந்து விடுவிக்க போராடினார்கள், நமது பெருமை மீட்கப்பட்டது; நாம் நமது எதிர்காலத்தை நிர்மாணிக்கூடிய இனம் ஆனோம்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.

என்னினும், ஆறாவது பிரதமர் (நஜிப் அப்துல் ரசாக்) ஒரு பேரழிவைக் கொண்டு வந்து விட்டார் என்று மகாதிர் கூறினார்.

“இனம், நாடு மற்றும் சமயம் ஆகியவற்றுக்காக போராடுவதிலிருந்து, இவற்றை எல்லாம் பணத்தைக் கொண்டு வாங்கி விடலாம் என்ற நம்பிக்கைக்கு நஜிப் கொண்டு வந்து விட்டார்”, என்று மகாதிர் கூறினார்.

கொடுக்கப்படும் இலஞ்சங்களுக்காக நாட்டை பலியிட்டு விடாதீர்கள் என்று மலேசியர்களை மகாதிர் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.

இலஞ்சங்கள் தாக்குப் பிடிக்காது. குறுகிய காலத்தில், நமக்கு இலஞ்சமாகக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் பணம் தீர்ந்து விடும். ஒரு சிறிய தொகைப் பணத்திற்காக நமது நாட்டை பலியிட்டு விடாதீர்கள் என்று மகாதிர் கூறினார்.

நஜிப் அப்துல் ரசாக் பிரதமராகத் தொடர்ந்தால் இது நடக்கும் என்று அவர் லங்காவில் வெளியிட்ட செய்தியில் கூறினார். இது முகநூல் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.