இப்போது நஜிப்பும் ரோஸ்மாவும் பிரயாணம் செய்யத் தடை இல்லை

 

முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவது துணவியார் ரோஸ்மா ஆகியோரின் பெயர்கள் இமிகிரேசன் இலாகாவின் வெளிநாடு செல்லத் தடைவிதிக்கப்பட்டிருப்பவர்களின் கருப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்று மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்த சில மணி நேரங்களுக்குள் அவர்களின் பெயர்கள் அக்கருப்புப் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இன்று காலை மணி 9.18 அவர்கள் இருவரின் அடையாள அட்டைகளின் எண்களைப் பயன்படுத்தி இமிகிரேசன் இலாகாவின் பிரயாண தகுதி விசாரணை அமைவுமுறையில் (எஸ்எஸ்பிஐ) மேற்கொண்ட ஒரு சோதணையில் அவர்களின் பிரயாணத் தகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. அவர்கள் பிரயாணம் செய்ய (“Tiada halangan”) தடை இல்லை என்று பச்சை வர்ண எழுத்துகள் இருக்கிறது. அப்படி என்றால் அவர்கள் பிரயாணம் செய்யலாம் என்றாகிறது.