பேராக்கில் பாரிசான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சித்தாவி வந்ததை அடுத்து அங்கு பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைக்க சுல்தான் நஸ்ரின் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
“இப்போது எங்களிடம் பெரும்பான்மை இடங்கள் உள்ளன, விரைவில் அரசாங்கம் அமைப்போம்.
“இரண்டு பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் பக்கம் வந்துள்ளனர். இப்போது சட்டமன்றத்தில் 31இடம் எங்கள் வசம்”, என மாநில ஹரப்பான் தலைவர் அஹமட் பைசல் அஸ்மு தெரிவித்தார். அவர் சுல்தானைச் சந்தித்த பின்னர் இஸ்தானா கிந்தாவுக்கு வெளியில் ஊடகங்களிடம் பேசினார்.
கட்சித்தாவிய அந்த இருவர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.