முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நாட்டை விட்டு வெளியேறாமல் தாம் தடுத்தது உண்மைதான் என்று மகாதிர் கூறினார்.
நஜிப் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இமிகிரேசன் இலாகா தடைவிதித்ததற்கு நிலுவையில் இருக்கும் விசாரணைகள் காரணமா என்று கேட்டதற்கு, அவருக்கு எதிராகப் பல புகார்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
சில புகார்கள் உண்மை என்றால், நாம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளிநாடுகளிலிருந்து அவரைக் கொண்டு வரும் நடவடிக்கைகளால் நமக்கு சுமை ஏற்படக்கூடாது என்றாரவர்.
எவ்வளவு சீக்கரத்தில் 1எம்டிபி மீதான விசாரணை தொடங்கும் என்ற கேள்விக்கு, பல நாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் பல அறிக்கைகளை அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது என்று மகாதிர் மேலும் கூறினார்.