கட்சித் தாவவில்லை: பேராக் பிஎன் பிரதிநிதிகள் விளக்கம்

பேராக்கில்  பக்கத்தான்   ஹரப்பான்   சாதாரணப்  பெரும்பான்மையில்     ஆட்சி  அமைக்க    உதவிய  இரண்டு   சட்டமன்ற   உறுப்பினர்களும்  தாங்கள்   கட்சித்தாவவில்லை    என்றும்  இன்னமும்  பிஎன்   உறுப்பினர்கள்தான்   என்றும்   கூறியுள்ளனர்.

பேராக்   மாநில  நிலைத்தன்மையின்   பொருட்டு    அஹமட்  பைசல்  அஸுமு   ஆட்சி    அமைக்க    ஆதரவு   வழங்கியதாக   துவாலாங்   செகா   சட்டமன்ற   உறுப்பினர்  நோலி  ராட்சி   கூறினார்.

“தேர்தல்   முடிந்து   மூன்று  நாளாகியும்   பேராக்கில்  மாநில   அரசு   இல்லை.

“ஆனால்,  கட்சி  மாறவில்லை     என்பதை    நான்   தெரிவித்துக்கொள்கிறேன். நான்  இன்னமும்  பிஎன்தான். நடந்ததற்கு  மன்னிப்பு   கேட்கிறேன்.  கட்சித்    தலைமை   எடுக்கும்   நடவடிக்கைக்குக்   கட்டுப்படுவேன்”,  என  நோலி   நேற்றிரவு    முகநூலில்    பதிவிட்டிருந்தார்.

அதேபோல்  சுங்கை   மானிக்  சட்டமன்ற   உறுப்பினர்   சைனோல்  பாட்சி  பதருடினும்   தானும்   கட்சி  மாறவில்லை   என்றும்   பைசல்   மந்திரி  புசாராவதற்கு   உதவியதாக  மட்டுமே   கூறினார்.

“இதை   சுல்தானிடமும்   தெரிவித்தேன்”,   என்றாரவர்.

புதன்கிழமை   தேர்தலில்  ஹரப்பான்  29  இடங்களை   வென்றது.  ஆனால்,  ஆட்சி  அமைக்க   30  இடங்களாவது   தேவைப்பட்டன.   அந்நிலையில்  பிஎன்  சட்டமன்ற  உறுப்பினர்கள்   இருவரது   ஆதரவு    ஹரப்பான்   அங்கு   ஆட்சி  அமைக்க   உதவியது.