அமைச்சரவை பதவிகள் பற்றிய முடிவுகள் எடுப்பதற்காக நேற்று நடத்தப்பட்ட பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திற்கு பிகேஆர் தலைவர்கள் வரவில்லை என்று ஹரப்பான் பங்காளித்துவ கட்சிகளின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவை பட்டியல் பற்றி நான்கு கட்சிகள் நடத்திய கூட்டத்தின் தொடர் கூட்டமாகும்.
மேலும் ஆலோசனைகள் தேவைப்பட்டதால், அடுத்த நாள் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கூட்டத்திற்கு ஒவ்வொரு கட்சியும் ஐந்து பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை மதியம் மகாதிர் மூன்று அமைச்சரவை பதவிகளை – தற்காப்பு, நிதி மற்றும் உள்துறை – அறிவித்தார். அப்போது அமனா மற்றும் டிஎபி தலைவர்கள் அவருடனிருந்தனர். ஆனால், பிகேஆர் தலைவர்கள் வரவில்லை.
மூன்று பிகேஆர் தலைவர்கள் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஆனால், கூட்டம் தொடங்குவதற்குமுன் அவர்கள் சென்று விட்டனர். பிகேஆர் பிரதிநிதிகள் இல்லாமல். அக்கூட்டம் காலை மணி 9 லிருந்து பிற்பகல் மணி 3 வரையில் நடந்தது.
ஆகவே, அமைச்சர் நியமனங்களை மகாதிர் திணித்தார் என்று பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி கூறியிருப்பது செல்லத்தக்கதல்ல என்று அந்த வட்டாரங்கள் கூறின.