குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படாதவரை புதிய நிதியமைச்சர் நிரபராதிதான் -ஜொகாரி

டிஏபி  தலைமைச்    செயலாளர்  லிம்   குவான்   எங்   நிதி   அமைச்சராக   நியமிக்கப்பட்டிருப்பது     சரியா    என்று   கேள்விகள்   எழுப்பப்படுகின்றன.  அவர்மீது    ஊழல்   வழக்கு    உள்ளதால்   இப்படிப்பட்ட    கேள்விகள்   எழுப்பப்படுகின்றன.

இது   குறித்து    முன்னாள்   இரண்டாம்நிலை   நிதி   அமைச்சர்   ஜொகாரி   அப்துல்   கனியிடம்   கேட்டதற்கு,  லிம்   குற்றவாளி    என்று   தீர்ப்பளிக்கப்படாதவரை   நிரபராதிதான்   என்றார்.

“ஒருவர்   குற்றவாளி    என்று   நிரூபிக்கப்படாதவரை     நிரபராதியே.  நாம்   சட்டத்தை  மதிக்க   வேண்டும்”,  என்றவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   நேற்று    அறிவித்த   மூன்று   அமைச்சர்களில்   லிம்மும்   ஒருவராவார்.

புதிய   நிதி  அமைச்சர்மீது   பினாங்கு   ஜார்ஜ்டவுன்,  ஜாலான்  பின்ஹோர்னில்   உள்ள  ஒரு  பங்களா  வீட்டை   ஒரு   வணிகரான   பாங்   லீ   கூனிடமிருந்து   சந்தை  விலைக்குக்  குறைந்த  விலையில்   வாங்கினார்  என்று  ஊழல்  வழக்கு  தொடரப்பட்டு   அது   இன்னமும்   விசாரணையில்   உள்ளது.