பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அகற்றல் மற்றும் எரிபொருள் மானியம் மீண்டும் வழங்குதல் மலேசியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்காது என்பதை மகாதிரின் புதிய அரசாங்கம் உறுதி செய்யும் என்று முன்னாள் நிதி அமைச்சரும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆலோசனை மன்றத்தின் உறுப்பினருமான டைம் ஸைனுடின் பெர்னாமாவிடம் சனிக்கிழமை கூறினார்.
தேவையற்ற ஊகங்கள் இருக்கின்றன. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் இது போன்ற ஊகங்கள் வழக்கமானதே. என்ன செய்யப்படும் தேர்தல் அறிக்கை இருக்கிறது. அதில் எல்லாமே இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
மகாதிர் அறிவித்த ஆலோசனை மன்றத்தில் டைம்முடன் பேங்க் நெகாரா முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தார் அசிஸ், பெட்ரோனாஸ் முன்னாள் தலைவர் முகமட் ஹசான் மரைக்கான், பொருளாதார வல்லுனர் ஜோமோ கவாமெ சுந்தரம் மற்றும் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.