நிதி அமைச்சராக விரும்பினேன் என்பதை மறுத்த ரபிஸி, சின் சியு டெய்லி மீது வழக்குத் தொடர்கிறார்

 

பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரமலி தாம் நிதி அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்பியாதாக கூறியுள்ள சின் சியு டெய்லிக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக கூறினார்.

பிரதமர் மகாதிர் செய்துள்ள அமைச்சரவை நியமனங்கள், டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது உட்பட, பிகேஆருடன் கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்டவை என்று ரபிஸி பகிரங்கமாக குறைகூறியிருந்தார்.

நான் நிதி அமைச்சராக விரும்பியதால் நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக சின் சியு டெய்லி கூறிக்கொள்கிறது என்று ரபிஸி கூறினார்.

எனக்கு அரசாங்கத்தில் எந்தப் பதவியும் வேண்டாம் என்று நான் கடந்த ஆண்டிலிருந்து பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயில், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா ஆகியோரிடம் கூறியுள்ளேன்.

சின் சியு டெய்லியின் அறிக்கை அவதூரானது. நான் வழக்குத் தொடர்வேன் என்று ரபிஸி அவரது டிவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளார்.