மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) தலைவர் சுல்கிப்ளி அஹமட் அரசாங்கத் தலைமைச் செயலாளரிடம் பணிவிலகல் கடிதத்தை இன்று காலை கொடுத்தார்.
“அவரது பணிவிலகல் கடிதம் ஒப்புதலுக்காக மகாதிரிடம் ஒப்படைக்கப்பட்டது.
“சுல்கிப்ளியின் இடத்துக்கு யாரை நியமிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை”, என ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
இன்னொரு வட்டாரம் சுல்கிப்ளி அவர் ஏற்கனவே பணிபுரிந்த சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கே திரும்பிச் செல்வார் என்று கூறியது.
14வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும் மகாதிர் பல துறைத்தலைவர்களின் தலைகள் உருளப் போவதாக எச்சரித்தது நினைவிருக்கலாம்.
எம்ஏசிசி பரவலான ஊழல் நடவடிக்கைகளைக் கவனிக்காது இருந்து விட்டதாக அவர் குற்றஞ் சாட்டியிருந்தார்.
மகாதிர் இப்போதைக்குச் சட்டத்துறைத் தலைவர் என்று எவரும் இல்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், முகம்மட் அபாண்டி அலி எப்போதும்போல் இன்று காலையும் அலுவலகம் சென்றதாகத் தெரிகிறது.