எம்ஏசிசி தலைமையகத்தில் வாகனங்கள் சோதனை

புத்ரா    ஜெயாவில்,  மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையத்   தலைமையகத்திலிருந்து  வெளியேறும்    வாகனங்கள்    சோதனை    செய்யப்படுவதாக     பெரித்தா   ஹரியான்   கூறியது.

அந்நாளேடு  பதிவேற்றம்  செய்த   ஒரு   காணொளி   எம்ஏசிசி   பாதுகாவலர்   ஒருவர்   அக்கட்டிடத்தைவிட்டு    வெளியேறும்   ஒரு   வாகனத்தைச்  சோதனை   செய்வதைக்   காண்பித்தது.

ஏன்  இச்சோதனை   என்பதை   உறுதிப்படுத்திக்கொள்ள   இயலவில்லை.

டாக்டர்  மகாதிர்   பிரதமராக   நியமிக்கப்பட்டதும்    ஆற்றிய   உரையில்   சில  அரசாங்கத்துறைகளில்      தலைவர்கள்   மாற்றப்படுவார்கள்    என்பதை  வலியுறுத்தியிருந்தார்.

தமது   நிர்வாகம்   எம்ஏசிசி   நியாயமாக    நடந்து  கொண்டிருக்கிறதா    என்பதை   ஆராயும்   என்றாரவர்.

“எம்ஏசிசி    நியாயமாக  நடந்துகொண்டதா   இல்லையா   என்பதை   ஆராய்வோம். அது  பாரபட்சம்  காட்டியது   தெரியவந்தால்  அதை மாற்றி  அமைப்போம்”,  என்றார்.