ரோஸ் பதிவாளர்: நான் வழக்கம் போல் இன்னும் கடமையில் இருக்கிறேன்

 

மன்றங்கள் பதிவாளர் (ரோஸ்) சுரயாத்தி இப்ராகிம் தாம் இன்னும் எப்போதும் போல் தமது கடமைகளைச் செய்து வருவதாகக் கூறினார்.

எந்த நடவடிக்கை பற்றியும் எனக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை; இன்று வரையில் தமது கடமைகளை வழக்கம் போல் செய்து வருவதாக அவர் கூறினார்.

மன்றங்கள் பதிவகத்தில் மிக சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில், பெர்சத்து மற்றும் டிஎபி ஆகியவற்றின் பதிவு இரத்து செய்யப்படும் என்ற மிரட்டல் நிலவிய காலம் உட்பட, அவர் அதன் பதிவாளராக இருந்தார்.

டிஎபி சம்பந்தப்பட்ட பிரச்சனை அக்கட்சி அதன் மூன்றாவது கட்சித் தேர்தலை நடத்திய பின்னர் தீர்க்கப்பட்டது.

ஆனால், பெர்சத்துக்கு ஒரு தற்காலிகமான இரத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அம்னோவின் கட்சித் தேர்தலுக்கு அதன் சட்டவிதி அனுமதித்த காலத்திற்கு அப்பால் தேர்தல் நடத்த அவர் அனுமதி அளித்தார்.