நஜிப்பிடம் உண்மையைச் சொல்லாதது தப்பு: கைரி வருத்தம்

முகைதின்  யாசினையும்   ஷாபி   அப்டாலையும்   கட்சிநீக்கம்   செய்தது   அடிநிலை  உறுப்பினர்களுக்குப்  பிடிக்கவில்லை  என்பதை  முன்னாள்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கிடம்   சொல்லியிருக்க   வேண்டும்   சொல்லாதது   தப்பு    என்று  கைரி   ஜமாலுடின்  வருத்தப்படுகிறார்.

“முகைதின்  தூக்கப்பட்டபோதும்   ஷாபி    தூக்கப்பட்டபோதும்   ஒரு   பிரச்னை   உருவானது.  அதை  ஒப்புக்கொள்ள   யாரும்   விரும்பவில்லை.  அதுதான்  மிகப்  பெரிய   தப்பாகப்   போய்விட்டது.

“அதற்கான    அறிகுறி  இருந்ததா?  தெளிவான   அறிகுறிகள்   இருந்தன.   நாங்கள்தான்  கவனிக்காமல்   இருந்தோம்.

“இப்படி   மீண்டும்  நிகழக்கூடாது.  அம்னோ   தலைவர்கள்  உண்மை   நிலவரம் பற்றி    அறியாதிருக்கும்  நிலையை   ஒருபோதும்   அனுமதிக்கக்  கூடாது.  உண்மை  நிலவரங்கள்  தலைவர்களுக்குத்   தெரியக்கூடாது   என்று   தொடர்ந்து   மூடி  மறைத்துக்  கொண்டிருந்தால்  அம்னோ  அழிந்துபோகும்”,  என்றவர்   எச்சரித்தார்.