புத்ரா ஜெயா, இன்று பிரதமர் மகாதிர் தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் முகம்மட் மற்றும் முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேல் ஆகியோரைச் சந்தித்தார்.
கனி பட்டேல் ரிம2.6 பில்லியன் மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேசனல் பிரச்சனைகள் மீதான சிறப்பு பணிப்படைக்கு தலைமையேற்றிருந்தார். விசாரணையின் பாதி கட்டத்தில் உடல் நலன் காரணம் என்று கூறி அவர் மாற்றப்பட்டார். அவரிடத்தில் முகம்மட் அபாண்டி அலி நியமிக்கப்பட்டார்.
ரவுஸும் கனியும் பட்டேலும் பிற்பகல் மணி 2.40 அளவில் அங்கு வந்து சேர்ந்தனர்.
நேற்று, பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் ஹனிபா மைடின் தலைமை நீதிபதி ரவுஸின் நியமனம் பெடரல் அரசமைப்புச் சட்டத்திற்கு முராணானது என்றும், அவர் நீக்கப்படுவதற்கு பதவி விலக வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
1எம்டிபி சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைத்து விட்டதாக ஏஜி அபாண்டி அலி மீது மகாதிர் குற்றம் சாட்டி இருந்தார்.
நேற்று, அபாண்டி அலி விடுமுறையில் செல்வார் என்று மகாதிர் அறிவித்தார். மலேசியாகினி மேற்கொண்ட ஒரு சோதனையில் அபாண்டிக்கு பிரயாணத் தடையும் விதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.