1எம்டிபி தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை பகிரங்கமாக்கப்பட்டுள்ளது

 

இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்டிருந்த 1எம்டிபி தேசிய கணக்காய்வாளர் அறிக்கை இப்போது மறுவகைப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைக் கணக்காய்வாளர் மடினா முகமட் அறிவித்தார்.

பிரதமர் மகாதிரை சந்தித்த பின்னர் மடினா இந்த அறிவிப்பை இன்று செய்தார்.

ஜனவரி 22, 2016 இல் இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்டு மார்ச் 4, 2016 இல் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த 1எம்டிபி கணக்காய்வாளர் அறிக்கை இப்போது திறந்த ஆவணமாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது என்று மடினா இன்று வெளியிட்ட செய்தி அறிகையில் கூறுகிறார்.

2015 ஆம் ஆண்டில், 1எம்டிபி நிதியிலிருந்து பல பில்லியன் ரிங்கிட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் நஜிப் கணக்காய்வாளர் அறிக்கைக்காக காத்திருக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், அந்த அறிக்கை தயாரானவுடன் அது இரகசியமானது என்று வகைப்படுத்தப்பட்டது.

தற்போதைய பிரதமர் மகாதிர் 1எம்டிபி விவகாரம் தீர்க்கப்படும் என்று சூளுரைத்துள்ளார்.