அன்வார் இன்று விடுவிக்கப்படும் சாத்தியம் உண்டு

 

மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்து விட்ட பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது குடும்பத்தினர் அன்வாரின் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாரிசான் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து புதிய ஹரப்பான் அரசாங்கம் அன்வாரின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பிரதமர் மகாதிரிடமிருந்து பிரதமர் பதவியை இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அன்வார் ஏற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

மன்னிப்பு வாரியம் இன்று பகல் மணி 11.00 க்கு கூடி அன்வாரின் மன்னிப்பு விவகாரத்தைப் பரிசீலிக்கும்.

மன்னிப்பு வழங்கப்பட்டால் அன்வாரின் விடுதலை அவர் தங்கி சிகிட்சை பெற்று வரும் வார்ட் 2சி, செராஸ் மறுவாழ்வு மையத்திலிற்ருந்து தொடங்கும் என்று மன்னிப்பு வாரியம் தெரிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.