அன்வார்: டைம் பங்களிப்பு செய்யலாம், ஆனால் பழைய ஊழல்களை நினைவில் கொள்ள வேண்டும்

 

பெர்சத்து அமைக்கப்படுவதற்கு முன்பே, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனுடினை ஊழல் பேர்வழிகள் ஒருவராக முன்னிநிலைப்படுத்தி இருந்தார்.

தற்போதைய பிரதமர் மகாதிர் அம்னோவை விட்டு வெளியேறி பக்கத்தான் ஹரப்பானுடன் சேர்ந்து குடிமக்களின் பிரகடனம் வெளியிட்ட போதும்கூட, டைமுடன் ஒத்துழைப்பது பற்றி அன்வார் அவரது கட்சியை எச்சரித்துள்ளார்.

“மகாதிர் மற்றும் டைம் ஆகிய இருவரும் சொந்தபந்தகளுக்கும் நண்பர்களுக்கும் சலுகை காட்டும் முதலாளித்துவத்தின் சிற்பிகள் மற்றும் அதன் வெறித்தனம் கொண்ட விரிவுரையாளர்கள்”,என்று சிறையிலிருந்து பிகேஆருக்கு எழுதியிருந்த கடிதத்தில் அன்வார் கூறியிருந்தார். அக்கடிதம் மே 2016 இல் வெளியிடப்பட்டது.

ஆனால், அன்வார் இப்போது சுதந்திரமானவர் மற்றும் அதே டைம் மற்றும் மகாதிர் ஆகியோருடன் இருந்து பணி புரிவதால், அவர் முன்பு வெளியிட்டிருந்த அறிக்கைகள் பற்றி கேட்ட போது அவர் சற்று கவனமாகப் போக்கைக் கடைபிடித்தார்.

“டைம் பங்களிப்புச் செய்யலாம், ஆனால் அவர் அதை உணர்ந்திருக்க வேண்டும். அவர் சேர்ந்திருப்பதை மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால் அவர் கடந்த கால சில முக்கி.யமான பிரச்சனைள் குறித்து விளக்கமளிக்க முடியாமல் இருப்பது பற்றி பெரும் திகைப்படைந்திருப்பததாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

“பழங்கதைகளைக் கொண்டுவர வேண்டிய தேவை இல்லை என்றும் மக்கள் கூறுகின்றனர். அது உண்மைதான். ஆனால் எனக்கு, நீங்கள் ஜனநாயக பொறுப்புடமைப் பற்றி பேச விரும்பினால், அது (முன்னாள் பிரதமர்) நஜிப்புடன் (அப்துல் ரசாக்) நின்றுவிடக் கூடாது.

“அது பழிவாங்கும் மற்றும் முடிவற்ற தொந்தரவளிக்கும் விசாரணை அளவுக்குச் செல்ல வேண்டும் நான் எண்ணவில்லை”, என்று அன்வார் இன்று (மே 16) மலேசியாகினிக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில் கூறினார்.

மேலும், ‘அம்னோ 2.0’ புதிய நிருவாகத்திற்குள் புகுந்து விடும் என்ற அச்சம் இருப்பதகாவும் அவர் கூறினார்.