டாக்டர் மகாதிர் பிரதமராகவும் கல்வி அமைச்சராகவும் செயல்படுவது, பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கைக்கு எதிராக இல்லை என ஹராப்பான் பொதுத் தலைவரான அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“இது முரண்பாடானது (தேர்தல் அறிக்கைக்கு) என்று நான் நினைக்கவில்லை. பிரதமர் என்பது ஒரு ‘போர்ட்ஃபோலியோ’ அல்ல என்று நான் நினைக்கிறேன்.
“பிரதமர் நாட்டைப் பொதுவாக நிர்வகிக்கிறார், துணைப் பிரதமரும் அப்படிதான்.
“இது ஒரு போர்ட்ஃபோலியோ அல்ல,” என்று அவர் கூறியதாக, தி ஸ்டார் மேற்கோளிட்டுள்ளது.
பிரதமர் அமைச்சர் பதவி வகிக்க முடியாது, குறிப்பாக நிதியமைச்சர் பதவி என்று, பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் 12-வது உறுதிமொழி கூறுகிறது.
முன்னாள் பிரதமர் நஜிப், முக்கிய அதிகாரங்களில் ஏகபோக உரிமை கொண்டு, அவருடைய அமைச்சரவை வெறும் தலையாட்டி பொம்மைகளாக இருந்ததன் காரணமாக இந்த வாக்குறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.