கல்வி அமைச்சர் பதவியைத் தாம் எடுத்துக்கொள்ள முடியாது, ஏனென்றால் அது பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கைக்கு முரணானது என்று பிரதமர் மகாதிர் கூறினார்.
அது தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் அதை இப்போதைக்கு மீற முடியாது…ஆனால் நான் கல்வி அமைச்சர் பதவியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால், என்று அவர் மேலும் கூறினார்.
நீங்கள் அப்பதவியை எடுத்துக்கொள்வீரா என்ற கேள்விக்கு, நான் எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர் பதில் அளித்தார்.
தனிப்பட்ட முறையில் அப்பதவியை நீங்கள் எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன், இல்லையென்றால் நான் ஏன் அப்பதவியைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் வினவினார்.
துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மயிலுக்கு அப்பதவி கொடுக்கப்பட மாட்டாது, ஏனென்றால் அவருக்கு வேறொரு பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்றாரவர்.
14 ஆவத் பொதுத் தேர்தலுக்கான பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கை பிரதமர் வேறு பதவிகளை ஏற்கக்கூடாது, குறிப்பாக நிதி அமைச்சு, என்று தெளிவாகக் கூறுகிறது.