பேரரசரின் ஒப்புதலோடு அமைச்சர்களின் பெயர்களை மகாதிர் வெளியிட்டார்

 

அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளப் போகிறவர்களின் பெயர் பட்டியலை பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டது.

பேரரசர் சுல்தான் மாமுட் V தின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இந்தப் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இரண்டு உயர்மட்ட பதவிகளைத் தவிர்த்து, பெர்சத்துக்கு மூன்று பதவிகள், பிகேஆருக்கு மூன்று, டிஎபிக்கு 4 மற்றும் அம்னாவுக்கு 3.

அவர்களின் பெயர்கள், பதவிகள் மற்றும் கட்சிகள்:

துணை பிரதமர் – வான் அசிஸா வான் இஸ்மாயில் (பிகேஆர்)

உள்துறை அமைச்சர் – முகைதின் யாசின் (பெர்சத்து)

கல்வி அமைச்சர் – மாஸ்லி மாலிக் (பெர்சத்து)

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் – ரீனா ஹருன் (பெர்சத்து)

மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் – வான் அசிஸா வான் இஸ்மாயில்

வீட்டு வசதிகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – ஸுரைடா கமாருடின் (பிகேஆர்)

நிதி அமைச்சர் – லிம் குவான் எங் (டிஎபி)

போக்குவரத்து அமைச்சர் – அந்தோனி லோக் (டிஎபி)

தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சர் – கோபிந் சிங் டியோ (டிஎபி)

மனிதவள அமைச்சர் – மு. குலசேகரன் (டிஎபி)

தற்காப்பு அமைச்சர் – முகமட் சாபு (அமனா)

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் – சலாஹுடின் அயுப் (அமனா)

சுகாதார அமைச்சர் – சுல்கிப்ளி அஹமட் (அமனா)

தொடக்க அமைச்சரவை முக்கியமான அமைச்சர்களைக் கொண்டிருக்கும். அது பின்னர் விரிவாக்கப்படலாம் என்று பிரதமர் மகாதிர் முன்பு கூறியுள்ளார்.