மேன்மக்கள் மன்றத்தின் தலைவர் டைம் ஸைனுடின் தமக்கு எதிராக அன்வார் இப்ராகிம் விடுத்துள்ள எச்சரிக்கையை உதறித்தள்ளினார்.
அன்வார் இப்ராகிம் மலேசியாகினியுடன் நடத்திய நேர்காணலில் டைமின் ஜனநாயக பொறுப்புடைமை குறித்து கேள்வி எழுப்பியதுடன் அந்த முன்னாள் நிதி அமைச்சர் அவரது கடந்த கால பெரும் பிரச்சனைக்களுக்கு விளக்கம் அளிக்க முடியாமல் இருப்பதை வெளிப்படுத்தினார்.
இன்று அதற்குப் பதில் அளித்த டைம், தமக்கு எதிராக பல நிருவாகத்தால் ஏராளமான விசாரனைகள் நடத்தப்பட்ட போதிலும், தாம் ஒரு தடவையில் கூட குற்றம் செய்திருப்பதாக கண்டுடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
இதைப் பற்றி மக்களுக்குத் தெரியாது. ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்கள் எனக்கு எதிராகப் புகார் செய்த போது, நான் போலீஸ் மற்றும் எம்எசிசி ஆகிய அமைப்புகளால் விசாரிக்கப்பட்டுள்ளேன்.
ஒவ்வொரு தடவையும், அப்துல்லா படாவியின் காலத்தில், மகாதிர் காலத்தில் மற்றும் நஜிப் காலத்தில், என்று டைம் மேலும் கூறினார்.
இது வரையில், என் மீது குற்றம் சாட்டப்படவில்லை என்றாரவர்.
மாமன்னரால் முழு மன்னிப்பு வழங்கப்பட்ட அன்வார் இப்ராகிம் கடந்த புதன்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் இப்போது புதிய பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தில் “அம்னோ 2.0” நுழைப்பார்க்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.