முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் இல்லத்திற்குச் சென்றதையும் அங்கு செய்தி சேகரித்துகொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டார் எனக் கூறப்படுவதையும் தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா மறுத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவ்வாறு பதிவிட்ட இரண்டு முகநூல் செயலர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையை அவர் கண்டித்தார்.
“இது தீங்குவிளைவிக்கும் அவதூறாகும். அந்தக் கட்டுரை சமூக தளங்கள் இரண்டிலும் என்னைப் போன்ற உருவம் கொண்ட ஒருவரின் படம் மற்றும் வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது.
“இந்தச் செயல்களின் விளைவால் நான் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டேன், இது எனக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதோடு; எனக்கு அச்சுறுத்தலாகவும் அமையலாம்,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகமட் ஹசிம் கூறுகையில், அவ்விரு முகநூல் செய்லர்களுக்கு எதிராக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யவுள்ளதாகவும் சொன்னார்.
-பெர்னாமா