தூத்துக்குடி இன படுகொலையை கண்டித்து ஐநா அலுவலகத்தில் மலேசிய நாம் தமிழர் இயக்கம் மனு

தமிழக துத்துக்குடியில் செதெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் அற வழியில் போராடியவர்கள்  மீது துப்பாக்கி சூட்டு நடத்தி  படுகொலை செய்த 20-கும் மேற்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு நேற்று மதியம் 2.00 மணியளவில் கோலாம்பூர் – புத்ராசெயாவில் உள்ள ஐக்கிய நாட்டு சபை அலுவலகத்தில் ஆட்சேப மனுவை மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமையில் , தமிழர் சார்ந்த இயக்கங்கள் மற்றும் இந்திய முசிலிம் அமைப்புகளும் ஒன்றிணைந்து வழங்கினர்.

செதெர்லைட் எனும் aஆலை தூத்துக்குடி மக்களின் உடல் நலத்திற்கும் விவசாய நிலத்திற்கும் மற்றும் குடிநீர்க்கும் கேடு விளைவிக்கும் அபாயகரமான திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வளரும் தலைமுறையினர் நல்வாழ்வுக்காக தூத்துக்குடி மக்கள் 23 ஆண்டுகளாக இத்திட்டத்தை எதிர்த்து வந்த வேளையில் கடந்த 100 நாட்களாக தொடர் அறவழி போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.

தனியொரு முதலாளிக்கு ஆதரவாக  மத்திய மோடி அரசு முதுகெலும்பு இல்லாத மாநில அரசு துணையுடன் திட்டமிட்ட ஒரு இனப்படுகொலையை அரங்கேறியிருக்கிறது.

எனவே இதனை கண்டித்து உயிரிழந்த தமிழர்களுக்கு நீதி வேண்டியும் செதெர்லைட் ஆலையை நிரந்தரமாக தடை செய்ய கோரியும் மலேசிய நாம் தமிழர் இயக்கம் மலேசிய ஐக்கிய நாட்டு சபை அலுவலகத்தில் மனு வழங்கியது என்று ஏற்பாடு குழு ஒருங்கிணைப்பாளரும் இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.