ஜமால் தப்பி ஓடவில்லையாம், ‘ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாராம்’

34 மணிநேரம்   கட்ட   வேண்டிய  பிணைப்பணத்தைக்  கட்டாமலும்    போலீஸ்  கண்ணில்   படாமலும்  மறைந்திருந்த   சுங்கை  புசார்   அம்னோ   தலைவர்   ஜமால்   முகம்மட்   யூனுஸ்   ஒரு   வழியாக    தலைகாட்டியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு     அனுப்பிவைத்த   ஒலிப்பதிவு   ஒன்றில்    தான்  மருத்துவமனையிலிருந்து   தப்பியோடியதாகக்   கூறப்படுவதை     அவர்  மறுத்தார்.

நீதிமன்றத்தில்   பிணைப்பணம்   செலுத்த   வேண்டியிருந்தது.  மற்ற   செலவுகளும்   இருந்தன. அதற்காக  பணம்    எடுப்பதற்குத்தான்   வெள்ளிக்கிழமை   மருத்துவ  மனையிலிருந்து   தாபோங்   ஹாஜி   அலுவலகத்து  விரைந்து   சென்றதாக    அவர்   சொன்னார்.

“தாபோங்   ஹாஜி   அலுவலகம்  மூடப்படுவதற்கு  முன்பு   அங்கு   செல்ல   வேண்டியிருந்தது.  பணத்தை   எடுத்ததும்   ஒரு  அழைப்பு   வந்தது.  என்னைப்  மருத்துவமனையிலிருந்து    தப்பியோடியதற்காக   போலீஸ்   தேடுவதாகக்  கூறியது.

“அப்போது   எனக்கு    உடல்நிலையும்   சரியில்லாததால்   சிறிது  ஓய்வெடுத்துக்கொள்வது    நல்லது   என்று   நினைத்தேன். நான்  போலீஸ்  விசாரணைக்கு   முழு  ஒத்துழைப்பு  கொடுப்பேன்”,  என்று  ஜமால்   அந்த  ஒலிப்பதிவில்   கூறியிருந்தார்.

இதையெல்லாம்   சிவப்புச்  சட்டைகள்   தலைவரான   ஜமால்    முன்னாலேயே  போலீசிடம்   தெரிவித்திருக்கலாம்.  தெரிவிக்காததற்கான  காரணத்தை    அவர்   கூறவில்லை. அத்துடன்  எப்போது  போலீஸ்   நிலையம்   செல்வார்   என்பதையும்  குறிப்பிடவில்லை.