பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் , கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்ட(எச்எஸ்ஆர்) த்தை இரத்துச் செய்வது குறித்து சிங்கப்பூருடன் விவா்திக்கப்போவதாகக் கூறினார்.
“தேவையற்ற திட்டங்கள்“ என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு என லண்டன் பினான்சியல் டைம்ஸ் நாளேட்டிடம் அவர் தெரிவித்தார்.
“தேவையற்றவை என்று கருதப்படும் சில திட்டங்களைக் கைவிடுவது அவசியம். அதிவிரைவு இரயில் திட்டத்துக்கு ரிம110 பில்லியன் செலவாகும். அதனால் ஒரு சென்கூட ஆதாயமில்லை. எனவே அது இரத்துச் செய்யப்படும்”, என்றார்.
ஆனாலும், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எச்எஸ்ஆர் தொடர்பில் சிங்கப்பூருடன் ஓர் உடன்பாடு செய்து கொண்டிருப்பதால் அதை இரத்துச் செய்ய சிங்கப்பூருடன் கலந்து பேசுவது அவசியமாகிறது என்றாரவர்.
2010-இல் நஜிப் அரசாங்கத்தின் பொருளாதார உருமாற்றத் திட்டங்களில் ஒன்றாக எச்எஸ்ஆர் திட்டம் உருவானது. 2016-இல் மலேசியாவும் சிங்கப்பூரும் அதற்கான உடன்பாட்டில் கையொப்பமிட்டன.
அதிவிரைவு இரயில் கோலாலும்பூருக்கும் சிங்கப்பூருக்குமிடையிலான பயண நேரத்தை 90 நிமிடங்களாகக் குறைக்கும் என்று கூறப்பட்டது.
We don’t need high speed train.spend money on public services