ரோஸ்மா விசாரணைக்காக எம்ஏசிசி தலைமையகம் வந்தார்

முன்னாள்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்   துணைவியார்   ரோஸ்மா   மன்சூர்   இன்று   காலை  மணி   10.45க்கு   எம்ஏசிசி   தலைமையகம்   வந்தார்.

அவருடன்  அவரின்   மகள்   நூர்யானா   நாஜ்வா   நஜிப்,  மருமகன்   டனியார்   கீஸிபயேவ்,   வழக்குரைஞர்கள்  ஆகியோரும்   வந்தனர்.

எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்   சென். பெர்ஹாட்   தொடர்பான   விசாரணைக்காக   ரோஸ்மா   எம்ஏசிசி    வந்தார்.

1எம்டிபி   துணை  நிறுவனமான   எஸ்ஆர்சி   2012-இல்   நிதி  அமைச்சின்கீழ்க்  கொண்டுவரப்பட்டது.

மே  22  மற்றும்  24 ஆம்   தேதிகளில்   எஸ்ஆர்சி   தொடர்பில்   நஜிப்பும்  எம்ஏசிசியால்  விசாரிக்கப்பட்டார்.

2016,  ஜனவரி  26-இல்,  முன்னாள்   சட்டத்துறைத்    தலைவர்   முகம்மட்   அபாண்டி   அலி,   எஸ்ஆர்சி    தொடர்பாகவும்   வங்கிக்  கணக்கில்   காணப்பட்ட  ரிம2.6 பில்லியன்    தொடர்பாகவும்   நஜிப்   தவறு   ஏதும்  செய்யவில்லை  என்று   அறிவித்திருந்தார்  என்பது  குறிப்பிடத்தக்கது.