தமக்குப் பதிலாக சட்டத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டோமி தாமசுக்கு முகம்மட் அபாண்டி அலி பாராட்டு தெரிவித்தார்.
அதேவேளை அப்பணி ஒரு இலகுவான பணி அல்ல வென்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்துக் கொள்வதுடன் ஏஜி பணி என்பது இலகுவான பணி அல்ல வென்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
“பொறுப்புமிக்க இப்பணியில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்”, என்று பெரித்தா ஹரியானிடம் அபாண்டி கூறினார்.
தாமசைச் சட்டத்துறைத் தலைவராக நியமிப்பதற்கும் அபாண்டி அலியின் பணியை முடிப்பதற்கும் முதலில் அரண்மனையிடமிருந்து எதிர்ப்பு வஃதது. பின்னர் அது ஒப்புதல் அளிக்க எல்லாம் சுமூகமாக முடிந்தது.