வெள்ளை மாளிகை: டிரம்ப்- கிம் உச்சநிலைக் கூட்டம் சிங்கப்பூர் செந்தோசா தீவில்

அமெரிக்க  அதிபர்  டோனல்ட்  டிரம்ப்பும்    வட  கொரிய   தலைவர்   கிம்   ஜொங்  உன்னும்     சந்தித்துப்   பேசுவதற்கான    ஏற்பாடுகள்  மும்முரமாக    நடைபெற்று  வரும்   வேளையில்    அந்த  உச்சநிலைக்கூட்டம்  சிங்கப்பூரின்   செந்தோசா    தீவில்   நடைபெறும்  என   வெள்ளை   மாளிகை   நேற்று    அறிவித்தது.

செந்தோசா   தீவின்  கேபெல்லா   ஹோட்டலில்   அக்கூட்டம்   ஏற்பாடு    செய்யப்பட்டிருப்பதாக   தெரிவித்த   வெள்ளை   மாளிகை   பேச்சாளர்   சாரா   சேண்டர்ஸ்,     பேச்சுகளுக்கு  இடமளித்து   உபசரிக்கும்   சிங்கப்பூரியர்களுக்கு   நன்றி    தெரிவித்தார். உச்சநிலைக்   கூட்டம்   ஜூன்  12-இல்   நடைபெறுகிறது.

ஓவல்   அலுவலகத்தில்   செய்தியாளர்களிடம்   பேசிய   டிரம்ப்,   பதவியில்   உள்ள   அமெரிக்க   அதிபர்  ஒருவர்   வட  கொரிய   தலைவரைச்   சந்திப்பது   இதுவே   முதல்  முறை   என்றார். இச்சந்திப்புக்கான  ஏற்பாடுகள்  “சிறப்பாக   நடைபெற்று  வருவதாக”     அவர்   சொன்னார்.