யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு, கடந்தாண்டு ஜனவரி முதல், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையில், அரசாங்கம் RM256.9 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ள கட்டுரையை தான் இன்னும் படிக்கவில்லை என பிரதமர் டாக்டர் மகாதிர் தெரிவித்தார்.
“நான் அந்தக் கட்டுரையை இன்னும் பார்க்கவில்லை,” என்று புத்ராஜெயாவில், சற்றுமுன்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்.
பெர்சத்து கட்சியின் நடுவண் தலைவரும், ஊடகவியலாளர் துறையில் முன்னர் முக்கியமானவராகவும் இருந்த ஏ காடீர் ஜாசின் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள அந்தக் கட்டுரையைப் பற்றி மகாதிரிடம் கேட்டபோது, அவர் அவ்வாறு பதிலளித்தார்.
அரசியலமைப்பு நிபுணர் டோனி தோமஸ்-ஐ, சட்டத்துறை தலைவராக, அகோங் நியமனம் செய்துள்ளது பற்றி தனது வலைப்பதிவில் காடீர் கருத்துரைத்துள்ளார்.
“ஏன் முடியாது? அரசியலமைப்பில் அதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, ஆடம்பரமும் கூட கொடுக்கப்பட்டுள்ளது அன்வர் (இப்ராஹிம்) அவர்களின் கைகளை முத்தமிட்டுள்ளார்,” என அவர் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
“கடந்த 16 மாதங்களில், கடந்தாண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை, மொத்தம் RM256.9 மில்லியன் அகோங்கிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அவரின் விடுதி, தங்கும் வசதி, அரண்மனை, தனிப்பட்ட உடமைகள், விமானம் மற்றும் போக்குவரத்து, பயிற்சி மற்றும் துணை உபகரணங்கள், ஆடை, சடங்குபூர்வ விழாக்கள், பரிசுகள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் அரண்மனை ஊழியர்களுக்கான சம்பளம், என.”
இதற்கிடையே, கடந்த 16 மாதங்களில் யாங் டி-பெர்த்துவான் அகோங், சுல்தான் முஹம்மத் V-இன், கால் பில்லியனைத் தொட்ட வாழ்க்கை செலவுகளை உறுதிப்படுத்த முடியாது என்று மகாதிர் கூறினார்.
“அவர் (கதிர்) கூறியுள்ளார், ஆனால் அது சரியா , இல்லையா என்பதனை நான் பார்க்க வேண்டும், அந்தச் செலவு ஒரு வருடத்திற்கா, ஒருசில வருடங்களுக்கா, 10 வருடங்களுக்கா, எனக்கு தெரியாது, நான் ஆய்வு செய்து, பின்னர் அறிவிக்கிறேன்,” என்றார் அவர்.