1எம்டிபி: நஜிப் மீது குற்றம் சாட்ட அமெரிக்கா ஆலோசிக்கிறது, அதை முதலில் மலேசியா செய்வது சிறப்பாகும்

 

முன்னாள் பிரதமர் நஜிப் அல்லது அவரது சகாக்கள் மீது குற்றம் சாட்டும் சாத்தியத்தை அமெரிக்க அரசு தரப்பு வழக்குரைஞர்கள் எண்ணிப்பார்த்துள்ளனர். இருப்பினும், அவர்கள் மீது முதலில் மலேசியா கிரிமினல் குற்றம் சுமத்துவதை அமெரிக்க அதிகாரிகள் விரும்புகின்ற்னர்.

இப்படித்தான் அது செய்யப்பட வேண்டும் என்று ஓர் அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரி கூறினார்.

குறைந்தபட்சம் ஆறு நாடுகள், மலேசியா, அமெரிக்கா மற்றும் சுவிட்ஸர்லாந்து உட்பட, அரசாங்க மூதலீட்டு நிதியமான 1எம்டிபியிலிருந்து திருடப்பட்ட $4.5 பில்லியனிலிருந்து ஒரு பகுதியை நஜிப்பும் அவரது சகாக்களும் எடுத்துக்கொண்டுள்ளனர் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகின்றன.

மலேசியாவின் புதிய அரசாங்கம் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக எப்பிஐ கருதுவதாக இந்த விசாரணையில் நேரடியாக ஈடுபட்டுள்ள இருவர் கூறுகின்றனர்.

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அமெரிக்க விசாரணையில் தம்மை பிரதிநிதிக்க அமெரிக்க முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) ஜோன் ஏஸ்குரோப்ட் மற்றும் நியுயோர்க் வழக்குரைஞர் டேவிட் போரிஸ் ஆகியோரை நஜிப் நியமித்துள்ளார்.

-ராய்ட்டர்ஸ்