எம்ஓஎப்: ராயா போனசுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை

முந்தைய    அரசாங்கத்தால்    அரசுப்   பணியாளர்களுக்கு   வழங்கப்படும்  என்று    வாக்குறுதி   அளிக்கப்பட்ட    ஹரி  ராயா   போனஸுக்கு   நிதி  ஒதுக்க   நாடாளுமன்ற  ஒப்புதல்   தேவை   என்று   நிதி  அமைச்சு  வலியுறுத்தியது.

“ ஹரி  ராயா   போனஸ்   பற்றி   2018  பட்ஜெட்   உரையில்   குறிப்பிடப்பட்டது   என்றாலும்    பட்ஜெட்டில்   அதற்கான   நிதி  ஒதுக்கப்படவில்லை”,  என  அமைச்சு   ஒன்று  ஓர்   அறிக்கையில்   தெரிவித்தது.

முன்னாள்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   எல்லா   அரசுப்  பணியாளர்களுக்கும்  ரிம1,500  போனஸ்   வழங்கப்படும்    என்று    அறிவித்திருந்தார்.

அதில்  ரிம500   ஹரி  ராயாவின்போது   வழங்கப்படுவதாக   கூறப்பட்டது.

நஜிப்பால்    அறிவிக்கப்பட்டதே    தவிர  அதற்காக  நிதி   ஒதுக்கீடு   செய்யப்படல்லை   என்பதைத்   தலைமைக்  கணக்காய்வுத்துறையும்    உறுதிப்படுத்தி    இருப்பதாக நிதி   அமைச்சு  கூறியது.

எனவே,  போனசுக்குக்   கூடுதல்    நிதி  ஒதுக்க   எதிர்வரும்   நாடாளுமன்றக்  கூட்டத்தில்  ஒப்புதல்  கோரப்படும்   என  நிதி  அமைச்சர்   லிம்   குவான்  எங்  கூறியிருந்தார்.

அதன்பின்னர்தான்    பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்,  கிரேட் 41க்குக்  கீழ் உள்ள  அரசுப்  பணியாளர்கள்  ரிம1,500-உம்  பணி ஓய்வு   பெற்றவர்கள்  ரிம200-உம்  ஹரி  ராயா  போனசாகப்  பெறுவார்கள்   என்று  அறிவித்தார்.