கிட் சியாங்கின் அரசியல் செயலாளராக வழக்குரைஞர் ஷயாரெட்ஸான் நியமிக்கப்பட்டுள்ளார்

 

வழக்குரைஞர் ஷயாரெட்ஸான் ஜோகன் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஎபியின் நாடாளுமன்ற தலைவர் மற்றும் இஸ்கண்டர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம்மின் அரசியல் செயலாளராக ஷயாரெட்ஸான் நியமிக்கப்பட்டிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக டிஎபி தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறது.

ஷயாரெட்ஸான் 2012 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்.

இந்நியமனம் தமக்கு ஒரு பெரிய கௌரவமாகும் என்று கூறிய ஷயாரெட்ஸான், லிம் மூத்த மற்றும் மதிக்கப்படும் அரசியல்வாதி ஆவார். அவரிடமிருந்து நான் அதிகமாகக் கற்றுக்கொள்வேன் என்று நம்புவதாக தொடர்பு கொண்ட போது அவர் மலேசியாகினியிடம் கூறினர்.

இந்த நியமனம் ஒரு முழு நேர வேலையல்ல, ஏனென்றால் தாம் தொடர்ந்து வழக்குரைஞர் தொழிலை மேற்கொள்ளப் போவதாக ஷயாரெட்ஸான், மேலும் கூறினார்.