அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசியல் செயலாளர்கள் அனைவரும் பிரதமரிடம் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பது, பொது ஊழியர்கள் நேர்மையை நிலைநாட்ட ஒரு துல்லியமான நடவடிக்கை ஆகும்.
விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹூடின் அயூப், பரிசு போன்றவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் நியாயமானது, இதனால் எந்தவொரு தவற்றையும் தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
“எனது அமைச்சின் கீழ் உள்ளவர்கள், எந்தவொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் நினைவு பரிசுகளைத் தவிர்க்க வேண்டுமென நினைவுறுத்தப்பட்டுள்ளோம். இதன்வழி, அமைச்சின் வரவுசெலவு திட்டத்திலிருந்து நிறைய பணம் செலவழிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும்.
“அரசாங்கம் கொடுக்கும் சம்பளம், எலவன்ஸ் மற்றும் அனைத்து வசதிகளும் போதுமானது என நான் கருதுகிறேன்,” என அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று, பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமத் அனைத்து அரசு நிர்வாக உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்று அறிவித்ததைப் பற்றி கருத்து கேட்டபோது, அவர் இவ்வாறு கூறினார்.
- பெர்னாமா