கடந்த வாரம் எம்ஏசிசி அதிகாரிகள் புத்ரா ஜெயாவில் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சுக்கு வருகை புரிந்தபோது சில ஆவணங்களை எடுத்துச் சென்றார்களாம்.
அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர் மன்றத்தைச் சந்தித்து விட்டுத் திரும்பிய மலேசியச் சுற்றுலா தலைமை இயக்குனர் மிர்ஸா முகம்மட் தைய்ப் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
அவர் மேல்விவரம் தெரிவிக்கத் தயாராக இல்லை. எம்ஏசிசி-இடம் கேட்கச் சொன்னார்.
“எம்ஏசிசி -இடம் உங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கும்.
“ஆவணங்கள் அவர்களிடம் உள்ளன. அவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும்”, என்றார். மூத்த ஆலோசகர் மன்றத்தில் பேசப்பட்டது என்னவென்பதையும் அவர் தெரிவிக்க மறுத்தார்.