நாட்டின் கடன் சூழ்நிலை 100-நாள் வாக்குறுதிகளுக்கு இடையூறாராக இருக்கிறது, துணைப் பிரதமர் கூறுகிறார்

 

பக்கத்தான் ஹரப்பான் அளித்த 100-நாள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் நேற்று கூறினார்.

நமக்கு கடன் பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை நாம் கட்டியாக வேண்டியுள்ளது. முன்னதாக, கடன் பிரச்சனை இந்த அளவுக்கு இருப்பது நமக்குத் தெரியவில்லை என்று கூறிய வான் அசிஸா, இப்போது அது தெரிய வந்துள்ளதால் 10 வாக்குறுதிகளை 100 நாள்களுக்குள் நிறைவேற்றுவோம் என்பதைச் செய்வதற்கு சற்று கூடுதலான நேரம் தேவைப்படுகிறது என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

ஆனால், ஹரப்பான் நிருவாகம் அளித்திருந்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஜிஎஸ்டி அகற்றப்பட்டதையும் எரிபொருள் விலை நிலைநாட்டப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

பல சமயங்களையும, கலாச்சாரங்களையும் இனங்களையும் இந்நாட்டில் ஒற்றுமை மற்றும் அமைதி நிலவுவதை உறுதி செய்யும்படி அவர் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டார்.