மூத்த செய்தியாளரான ஏ.காடிர் ஜாசின் புதிய மலேசியாவில் அம்னோ தலைவராவதற்கு “இளைஞர்” தெங்கு ரசாலியே மிகவும் பொருத்தமானவர் என்று கூறினார்.
“என்னைப் பொருத்தவரை, அம்னோவில் பயனான மாற்றத்தைச் செய்யக்கூடியவர் குவாங் மூசாங் எம்பியும் முன்னாள் அம்னோ உதவித் தலைவருமான தெங்கு ரசாலிதான்.
“81 வயதானாலும் அவர் இளைஞர்தான். அவருக்கு 10வயது மூத்தவரான டாக்டர் மகாதிர் முகம்மட் பக்கத்தான் ஹரப்பானுக்கு வெற்றியைத் தேடித் தந்து இரண்டாவது முறையாக பிரதமராக முடிகிறது என்றால் கூலி ஏன் அம்னோவுக்குத் தலைவராகக் கூடாது?”, என காடிர் இன்று வலைப்பதிவு ஒன்றில் வினவினார்.
“மகாதிருக்கு அடுத்து நாடாளுமன்றத்தில் நீண்டகால அனுபவம் உள்ளவர் தெங்கு ரசாலிதான், வேறு எவரும் இல்லை. அவரே இப்போதைய பிரதமரைப் பற்றி நீண்டகாலமாக அறிந்து வைத்திருப்பவருமாவார்.
முன்னாள் கட்சி விவகாரங்களில் தான் தலையிடவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இருப்பது அவசியம் ஏன்பதால் அவ்வாறு கூறுவதாகவும் அவர் சொன்னார்.