அமெரிக்க வெளியுறவு அமைச்சு, பயங்கரவாதிகள் ரஷ்யாவில் உலகக் கிண்ணக் காற்பந்தாட்டங்கள் நடக்கும் இடங்களைக் குறி வைத்துத் தாக்கலாம் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
“உலகக் கிண்ணம் போன்ற பெரிய போட்டிகள் பயங்கரவாதிகளுக்குக் கவர்ச்சிகரமான இலக்குகளாகும்”, என அது ஓர் அறிக்கையில் கூறியது.
“உலகக் கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டிக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருக்கும். ஆனாலும் பயங்கரவாதிகள் விளையாட்டரங்குகள், சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து மையங்கள், இதர பொது இடங்கள் போன்றவற்றைத் தாக்க முற்படலாம்”, என்று அது குறிப்பிட்டது.
எனவே, ரஷ்யாவுக்குப் பயணம் செய்ய நினைக்கும் அமெரிக்கர்கள் நன்கு பரிசீலனை செய்து பயணத்தில் ஈடுபட வேண்டும் என்று அது ஆலோசனை தெரிவித்தது.