கைரி அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்

 

இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் அம்னோ கட்சித் தேர்தலில் கைரி ஜமாலுடின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறார்.

அவர் இன்று தமது நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்வார் என்று த ஸ்டார் செய்தி கூறுகிறது.

தாம் அம்னோ உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாகவும், அம்னோ தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று முன்னதாக அவர் தெரிவித்திருந்த நிலைப்பாட்டிற்கு எதிர்மாறாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

துணைத் தலைவர் பதவிக்கான போட்டியிலிருந்து அவர் விலகிக்கொள்ளப் போகிறாரா என்பது இன்னும் தெளிவாக்கப்படாததாக இருக்கிறது.

அம்னோ தலைவர் பதவிக்கு தற்போதைய இடைக்கால தலைவர் ஸாகிட் ஹமிடி, தெங்கு ரஸாலி ஹம்சா மற்றும் ராமாட் அஸிம் அப்துல் அசிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கைரி ஜமாலுடின் அம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மலேசியாகினி அவருடன் தொடர்பு கொள்ள முயன்று வருகிறது.