அலிபாபா குழும நிறுவனரும் அதன் செயல்முறை தலைவருமான ஜேக் மா இன்று காலை டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்தபோது பிரதமரின் தொழில்நுட்ப அறிவின் ஆழம் கண்டு அசந்து போனார்.
பிரதமர் அலுவலகத்தில் மகாதிரைச் சந்தித்த பின்னர் பெர்னாமாவிடம் பேசிய ஜேக் மா, “அவரின் தொழில்நுட்ப அறிவு என்னை வியக்க வைத்தது”, என்றார்.
காலை ஒன்பது மணிக்கு மகாதிரைச் சந்தித்த ஜேக் மா ஒரு மணி நேரம் அவருடன் கலந்துரையாடினார். இருவரும் மலேசியர்களை வறுமைப் பிடியிலிருந்து விடுவிப்பது பற்றியும் இளைஞர்களையும் சிறு வணிகத்தையும் கைதூக்கி விடுவது பற்றியும் கருத்துகள் பரிமாறிக் கொண்டனர்.
“அது நல்லதொரு சந்திப்பு”, என்றவர் குறிப்பிட்டார்.
ஜேக் மா, கோலாலும்பூர், பங்சார் சவுத்தில் அலிபாபா அலுவலகம் ஒன்றைத் திறந்து வைப்பதற்காக வந்துள்ளார்.
ranabi