அம்னோவின் மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளுக்காக நடந்த தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று மாலை மணி 5க்கு அறிவிக்கப்படும் எனக் கட்சி நிர்வாகச் செயலாளர் அப் ரவுப் யூசுப் கூறினார்.
“இணையத் தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் முடிவுகள் அதிகாரப்பூர்வமானவை அல்ல”, என்றவர் நேற்றிரவு கூறினார்.
நேற்று மாலையிலிருந்தே அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் சமூக உடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே அம்னோ உயர்மட்ட தேர்தல் ஜூன் 30-இல் நடக்கும். தெங்கு ரசாலி, கைரி ஜமாலுடின், முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி ஆகிய மூவரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

























