ரிம300 மில்லியன் வைத்திருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறார் அஸ்மின்

பொருளாதார   விவகார   அமைச்சர்    முகம்மட்  அஸ்மின்   ரிம300  மில்லியனை   வெளிநாடுகளில்   பதுக்கி   வைத்திருப்பதாகக்   கூறப்படுவதை   அபத்தம்   என்று   கூறி    உதறித்   தள்ளினார்.

இன்று  ஹரி  ராயா  திறந்த   இல்ல   உபசரிப்பு   ஒன்றில்,   செய்தியாளர்களிடம்   பேசிய   முன்னாள்    சிலாங்கூர்   மந்திரி   புசார்,   அக்குற்றச்சாட்டைச்   சாக்கடை    அரசியல்   என்று   வருணித்தார்.

அவ்வளவு   பணம்  இருந்தால்   அரசியலில்   இருக்க   வேண்டிய    அவசியமிருக்காதே    என்றாரவர்.

“இப்படிப்பட்ட    சாக்கடை    அரசியலுக்கெல்லாம்  பதில்   சொல்ல   மாட்டேன்.

“ரிம300  முல்லியன்    இருந்தால்  ,  கெஅடிலானில் (பிகேஆரில்)   ஏன்  இன்னும்  இருக்கப்  போகிறேன்?”,  என்றாரவர்.

அஸ்மின்  சிலாங்கூர்  மந்திரி  புசார்   ஆனபோதே  பக்கத்தான்   ஹரப்பான் (அப்போது  பக்கத்தான்  ரக்யாட்)  பிரதிநிதிகள்   தங்கள்   சொத்து   விவரங்களை    அறிவிக்கும்   வழக்கம்    நடைமுறையில்   இருந்தது.

ஒரு  காலத்தில்    அஸ்மினுக்கு  வேலை   செய்ததாகக்   கூறிக்கொள்ளும்   சிலாங்கூரின்   தோயோல்   என்ற   வலைப்பதிவர்தான்   அப்படியொரு   குற்றச்சாட்டைச்  சுமத்தி   இருந்தார்.

அஸ்மினும்   அவரின்   மனைவி   ஷம்சிடார்   தஹரினும்   வெளிநாடுகளில்  பல   வங்கிக்  கணக்குகள்   வைத்திருப்பதாக   ஜூன்  18-இல்  ஒரு  வலைப்பதிவில்    அவர்   குறிப்பிட்டிருந்தார்.